சமையல்

5ந்தே நிமிடத்தில் காரசாரமான மிளகாய்சட்டினி செய்ய வேண்டுமா..?

மிளகாயுடன் காரச் சட்னி நிறைய பேர் செய்வார்கள். அனைவருக்கும் மிகவும் பிடித்த மசாலா மிகவும் சுவையாக இருக்கும் இந்த காரமான மிளகாய்  சட்னியை எப்படி அரைப்பது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம்  இந்த காரமான சட்னியை அரைத்து 10 இட்லி சாப்பிட்டால் உள்ளே  இறங்குவதே தெரியாது என்று தெரியாது  அந்த அளவிற்கு சுவையாக இருக்கும். சிரமமின்றி உங்களுக்காக எளிதான மற்றும் சுவையான சூப்பர் கார சட்னி செய்முறை.

முதலில் காம்பை நீக்கிய 10 முதல் 15 மிளகாயை எடுத்து தண்ணீரில் நன்றாக ஊற வைக்கவும். மிளகாயை தண்ணீரில் சுமார் 15 நிமிடம் ஊற வைக்கவும் பிறகு தண்ணீரை வடித்துவிட்டு மிளகாயை மிக்ஸி ஜாரில் போடவும். சட்னியில் தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து மிளகாயை நன்றாக அரைக்கவும், விதைகள் அனைத்தையும் அறைய வேண்டும்.

அரைக்கப்பட்ட மிளகாய் சாருடன் 10 தோல் உரிக்கப்பட்ட சின்ன வெங்காயம் சேர்த்து மீண்டும் மிக்சிஜாரில் போட்டு அரைத்துகொள்ளவும் இந்த சட்னியை ஊற்றி ஒரு சிறிய பாத்திரத்தில் வைக்கவும். (உங்களிடம் சிறிய வெங்காயம் இல்லையென்றால், பெரிய நடுத்தர அளவு வெங்காயத்தையும் சிறிய துண்டுகளாக செய்துகொள்ளலாம் .

மிளகாய் சட்டினி

ஒரு தாளிப்பு கரண்டியை அடுப்பில் வைத்து ஒரு  தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றவும்.பிறகு எண்ணெய் சூடானதும் கருவேப்பிலை –ஒரு கொத்து, கடுகு – ஒரு  ஸ்பூன், உளுத்தம்பருப்பு – ஒரு ஸ்பூன், போட்டு தாளித்து சுட சுட இருக்கும் இந்த தாளிப்பு எண்ணெய்யை அப்படியே சட்னியில் ஊற்றி  நன்றாக கலக்க வேண்டும்.

                      (கட்டாயம் நல்லெண்ணெயில் தான் இந்த சட்னி தாளிக்க வேண்டும்.)

 

இந்த சட்னியில் எல்லாவற்றையும் பச்சையாகவே அரைப்போம். எனவே சுடச்சுட எண்ணெயை ஊற்றி, சட்னியை நன்கு கலக்கி அந்த பச்சை வாடையைப் போக்கவும், சட்னிக்கு நல்ல சுவை கிடைக்கும். இந்த சட்னியை அதிகம் தொட்டு, மத்த சட்னி போன்ற அனைத்தையும் சாப்பிடுங்கள். இந்த சட்னியை அரைக்கும்போது ஆகும் செலவு மிகக் குறைவு

 

இந்த சட்னியை கொஞ்சம் மோருமொருவான தோசைக்கோ அல்லது இட்டிளுக்கோ   ஊறுகாய் போல் தொட்டு சாப்பிட்டால் போதும். தேவைப்பட்டால் தேங்காய் சட்னியுடன் பரிமாறவும் சுவை அதிகரிக்க. காரம் உங்களுக்கு மிகவும் பிடிக்குமா? ஒருமுறை இப்படி ட்ரை பண்ணி பாருங்க. அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்..

 

Show More

Related Articles

Leave a Reply

Back to top button
%d bloggers like this: