மாநிலம்

ஆண் குழந்தை பிறக்கவில்லை எனக் கூறி பெண்ணை அவரது கணவர் மற்றும் மாமியார்

உத்தரபிரதேச மாநிலம் மஹோபா மாவட்டத்தில் உள்ள ராம்நகர் பகுதியை சேர்ந்த ஒரு எழுத்தருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். ஆண் குழந்தை பிறக்கவில்லை எனக் கூறி பெண்ணை அவரது கணவர் மற்றும் மாமியார் பொது இடத்தில் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பான வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்த வீடியோவில், அந்த பெண் வெளியேறும்போது அழுகிறார். ஆனால், அவரை அவரது குடும்பத்தினர் சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும், அவரை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர்.

முந்தின நாள் இரவு அந்த பெண்ணின் கணவன் கட்டைகளை கொண்டு வரவில்லை, பையன்கள் கொடுக்காமல் போனது ஏன்? என்று கூறி மனைவியின் பிறப்புறுப்பில் மரக்கட்டைகளை திணித்து கொடூரமாக சித்திரவதை செய்துள்ளார். மேலும் பல நாட்களாக பட்டினி போட்டு சித்ரவதை செய்துள்ளார்.

இவர்களது சித்ரவதையை பொறுக்க முடியாத அந்த பெண், போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக அவரது கணவர், மாமியார் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தற்போது அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Show More

Related Articles

Leave a Reply

Back to top button
%d bloggers like this: