
அனில் குமார் தனது முதல் திருமணத்தை மறைத்து சரோஜாவை திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. இது அவர்களுக்கு இடையே அடிக்கடி மோதல்களை ஏற்படுத்தியுள்ளது. சரோஜா தனது தாயின் வீட்டிற்குச் சென்றார்.
ஒரு காதல் மனைவியைக் கொலை செய்து அவரது உடலை வெட்டிய ட்ரம்மில் அடைத்த கணவரை போலீசார் தேடுகிறார்கள். ஹைதராபாத்தின் தெலுங்கானா மாநிலத்தின் எஸ்.பி.ஆர் ஹில்ஸில் பகுதியில் வசிப்பவர் அனில் குமார் . உடல்நிலை சரியில்லாமல் அவரது மனைவி 2020 இல் இறந்தார். பின்னர், அவர் 6 மாதங்களுக்கு முன்பு சரோஜாவை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்த வழக்கில், முதல் திருமணத்தை மறைத்து அனில் குமார் சரோஜாவை மணந்ததாகத் தெரிகிறது. இது அவர்களுக்கு இடையே அடிக்கடி மோதல்களை ஏற்படுத்தியுள்ளது. இதை தொடர்ந்து கோபத்தில் சரோஜா தனது தாயின் வீட்டிற்குச் சென்றார். சரோஜா ஒரு மாதத்திற்கு முன்பு தனது கணவரின் வீட்டிற்கு திரும்ம்பி வந்தார். ஆனால் இருவருக்கும் இடையே பிரச்சினைகள் வளர்ந்து கொண்டேபோனது.
இந்நிலையில், கடந்த 4 நாட்களுக்கு முன்பு மகளிடம் பெற்றோர்கள் பேச போன் செய்தனர் ஆனால் சரோஜா போன் எடுக்கவில்லை தொடர்ந்து இரண்டுநாட்கள் போன் செய்தும் மகள் எடுக்காததால் அனில் குமாருக்கு அழைப்பு விடுத்துள்ளார். அவர் தொலைபேசியை எடுக்கவில்லை . சரோஜாவின் குடும்பத்தினர்,சந்தேகமடைந்துஅனில்குமாரின்வீட்டிற்குசென்றுள்ளனர். அனால் அங்கு வீடு பூட்டபட்டிருன்தது
இதனால் சந்தேகத்துடன் பெற்றோர் பஞ்சரா ஹில்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அனில் குமாரின் வீட்டின் கதவை போலீசார் உடைத்தபோது, டிரம்மில் சரோஜா வெட்டப்பட்டு உடல் அழுகிவிட்டது. இதைப் பார்த்த சரோஜாவின் பெற்றோர் கதறி அழுதனர். உடல் பறிமுதல் செய்யப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. தலைமறைவான கணவர்அனில்குமாரை தீவிரமாக போலீசார் தேடுகிறார்.