தமிழ்நாடு
இனி ஆதாரை போல தமிழக மக்களுக்கு மக்கள் அடையாளஅட்டை – தமிழக அரசு

மக்கள் ஐடி: தமிழக மக்களுக்கு ஆதார் போன்று தனி அடையாள அட்டையை உருவாக்க தமிழ்நாடு இ-ஏஜென்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஆதார் எண் போன்று மக்கள் அடையாள அட்டையை தமிழக அரசு அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமூக நலத் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் 10 முதல் 12 இலக்க அடையாள எண்ணை உருவாக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
அந்த நோக்கத்திற்காக, மாநில குடும்ப தரவுத்தளத்தை தமிழக அரசு உருவாக்கி வருவதாகவும், திட்டம் தமிழ்நாடு மின் ஆளுமை முகமையால் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.