சினிமா
ஆணாக மாறிய தமன்னா ஆண் வேடமிட்டு ஆணாக மாறிய வீடியோவை
தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் தமன்னா, ‘கேடி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். திரையுலகிற்கு வந்த சில வருடங்களிலேயே தனது நடிப்பு திறமையால் அஜித், விஜய், சூர்யா என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார். அதன்பிறகு தெலுங்கு படங்களில் வாய்ப்பு பெறுவதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில், தமன்னாவின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. புடவையில் இருக்கும் தமன்னா தனது அறைக்கு சென்ற சிறிது நேரத்தில் ஆண் வேடமிட்டு ஆணாக மாறிய வீடியோவை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.