கல்விதமிழ்நாடு
Trending

SSLC Result | 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் குறித்த முக்கிய அறிவிப்பு

SSLC Result | Important announcement regarding Class 10 general examination results.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் மெட்ரிக் பள்ளிகளில் மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கடந்த மே மாதம் பொதுத் தேர்வு நடைபெற்றது. சுமார் 9 லட்சம் பேர் எழுதிய 45 லட்சம் விடைத்தாள்களை மதிப்பிடும் பணி கடந்த 1ம் தேதி முதல் 9ம் தேதி வரை நடைபெற்றது.

விடைத்தாள்கள் திருத்துதல், மதிப்பெண்கள் தொகுத்தல், சரிபார்க்கும் பணி முடிந்து தேர்வுத் துறை இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. எனவே, பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை மறுநாள் (ஜூன் 17) காலை 10 மணிக்கு www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும்.

தேர்வு முடிவுகள் வெளியான ஓரிரு நாட்களில் பள்ளிகள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை வழங்க முடியும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

10ம் வகுப்பு முடித்த மாணவர்கள் உடனடியாக 11ம் வகுப்பில் சேர வேண்டும் என்றும், நடப்பு கல்வியாண்டுக்கான 11ம் வகுப்பு வரும் 27ம் தேதி தொடங்கும் என்றும் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Show More

Related Articles

Leave a Reply

Back to top button
%d bloggers like this: