சங்கராபுரம் அருகே பாட்டை புறம்போக்கு இடத்தை மீட்டு எடுக்க வலியுறுத்தி வட்டார வளர்ச்சி அலுவலகம் முற்றுகை
அலுவலகம் முன் அமர்ந்து பொதுமக்கள் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியினர் போராட்டம்

சங்கராபுரம் அருகே உள்ள ஆரூர் கிராமத்தில்
பாட்டை புறம்போக்கு இடத்தை மீட்டு எடுக்க வலியுறுத்தி வட்டார வளர்ச்சி அலுவலகம் முற்றுகை.-அலுவலகம் முன் அமர்ந்து பொதுமக்கள் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியினர் போராட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள ஆரூர் கிராமத்தில் ஆதிதிராவிடர் மக்கள் குடியிருப்புக்கு பகுதிக்கு அருகில் உள்ள பாட்டை புறம்போக்கு நிலத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார் அதனால் இந்த இடத்தை மீட்க கோரி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் பொதுமக்கள் மனு அளித்ததாகவும்.
இதையடுத்து அவர்களிடமிருந்து இடத்தை மீட்டு பொதுமக்களிடம் ஒப்படைக்க மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவிட்டதாகவும் உத்தரவை அலட்சியப்படுத்திய இதுவரை ஆக்கிரமிப்பை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றுகோரி சங்கராபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன் அவர்களை கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் ஊர்பொதுமக்கள் இணைந்து வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.