ரமலான் இரவு தொழுகை

இரண்டு ரக்அத்கள் மேலும் இரண்டு ரக்அத்கள் இன்னும் இரண்டு ரக்அத்கள், பிறகு இரண்டு ரக்அத்கள், மீண்டும் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பின்னர் வித்ரு தொழுதுவிட்டுப்படுத்தார்கள். முஅத்தின் வந்ததும் எழுந்து சிறிய அளவில் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு நபி (ஸல்ﷺ) அவர்கள்: (பள்ளிக்குப்) புறப்பட்டு ஸுபுஹ் தொழுகை நடத்தினார்கள். அறிவிப்பவர் இப்னு அப்பாஸ் (ரலி)
ஸஹீஹ் புகாரி 1198.
🕌 இன்றைய தொழுகை நேரங்கள்
🌻 நாள் : 28.03.2022.
🌻 ஹிஜ்ரி : ஷாபான், 24, 1443.
🌻திங்கட்கிழமை.
🕟 சுப்ஹூ: 5:03 AM
🕜 ளுஹர் : 12:20 PM
🕞 அஸர் : 3:35 PM
🕢 மக்ரிப் : 6:26 PM
🕗 இஷா : 7:36 PM
🌤️ சூரிய உதயம் 6:13 AM
⏰தொழுகை நேரங்கள் கள்ளக்குறிச்சியை மையமாக கொண்டது.
⏰ நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகை நேரம் குறிக்கப்பட்ட கடமையாகவுள்ளது.
📖 அல்குர்ஆன் 4:103.
🕋 இஸ்லாமிய கொள்கை விளக்கம் – 682
👉 திருக்குர்ஆனில் உலக மக்கள் அனைவரையும் நோக்கி பேசும் வசனங்கள் – 57
🌻அல்லாஹ்வின் பாதையைக் கேலியாகக் கருதி அதை விட்டும் மக்களை அறிவின்றி வழிகெடுப்பதற்காக வீணான செய்திகளை விலைக்கு வாங்குவோர் மனிதர்களில் உள்ளனர்.
▪️அவர்களுக்கே இழிவுபடுத்தும் வேதனை உள்ளது.
📖 அல் குர்ஆன் 31:6
🌻மனிதனுக்கு அவனது பெற்றோரைக் குறித்தும் வலியுறுத்தியுள்ளோம்.
▪️அவனை அவனது தாய் பலவீனத்துக்கு மேல் பலவீனப்பட்டவளாகச் சுமந்தாள்.
▪️அவன் பாலருந்தும் பருவம் இரண்டு ஆண்டுகள்.
▪️எனக்கும், உனது பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக!
▪️என்னிடமே திரும்பி வருதல் உண்டு.
📖 அல் குர்ஆன் 31:14
💝 ஒழுக்க நெறிகள் – 682
👉 முதன் முதலில் ஜும்ஆ தொழுகை நடைபெற்ற இரண்டாவது பள்ளி வாசல் …
🗣️ இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
🌹 நபி(ஸல்) அவர்களின் பள்ளிவாசலில் நடத்தப் பட்ட ஜும்ஆவுக்கு அடுத்து பஹ்ரைனில் உள்ள ஜுவாஸா எனும் கிராமத்தில் அப்துல் கைஸ் பள்ளியில்தான் முதன்முதலாக ஜும்ஆ நடந்தது.
📚 நூல் : ஸஹீஹ் புகாரி 892.
👉 திருக்குர்ஆனில் உலக மக்கள் அனைவரையும் நோக்கி பேசும் வசனங்கள் – 56
🌻மனிதர்களின் கைகள் செய்தவற்றின் காரணமாக கடலிலும், தரையிலும் சீரழிவு மேலோங்கி விட்டது.
▪️அவர்கள் திருந்துவதற்காக அவர்கள் செய்தவற்றில் சிலவற்றை அவர்களுக்குச் சுவைக்கச் செய்வான்.
📖 அல் குர்ஆன் 30:41
🌻இக்குர்ஆனில் மனிதர்களுக்காக ஒவ்வொரு முன்னுதாரணத்தையும் தெளிவுபடுத்தி உள்ளோம்.
▪️(முஹம்மதே!) அவர்களிடம் நீர் சான்றைக் கொண்டு வந்தால் “நீங்கள் வீணர்களேயன்றி வேறில்லை” என்று (நம்மை) மறுப்போர் கூறுவார்கள்.
📖 அல் குர்ஆன் 30:58