சினிமா

SK20 படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நடிகை..!

தொலைக்காட்சியில் அறிமுகமான நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார். தமிழ்த் திரையுலகம் அவருக்கு குறிப்பிடத்தக்க ரசிகர்களால் நிறைந்துள்ளது. சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான நெல்சன் இயக்கத்தில் வெளிவந்த டாக்டர் படம் சிவகார்த்திகேயனை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. இந்த படத்தின் மூலம் அவரது படங்களை ரசிகர்கள் கவனிக்க ஆரம்பித்துவிட்டனர்.

சக்ரவர்த்தி இயக்கத்தில்

தற்போது சிவகார்த்திகேயன் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் ‘டான்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயன் தயாரிக்கிறார். இந்தப் படத்தில் நடிகை பிரியங்கா மோகனுடன் சிவகார்த்திகேயன் இரண்டாவது முறையாக நடிக்கிறார்.

இந்த படத்தின் பாடல்கள் மற்றும் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் மே மாதம் வெளியாக உள்ளது. இதையடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘அயலான்’ படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன.

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக

இதையடுத்து அனுதீப் கேவி இயக்கும் புதிய படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் ஒப்பந்தமாகியுள்ளார். இயக்குனர் அனுதீப் தெலுங்கில் வெற்றி பெற்ற ஜாதிரத்னாலு படத்தின் இயக்குனர். இப்படத்தில் வெளிநாட்டு நடிகை ஒருவர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.அதாவது சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைனை சேர்ந்த மரியா ரைபோஷாப்கா ஒப்பந்தமாகியுள்ளார். ‘ஈடர்’ படத்திலும், ‘ஸ்பெஷல் ஆப்ஸ்’ என்ற வெப் சீரிஸிலும் நடித்துள்ளார்.

உடனடி செய்திகளைப் பெறவும் உங்கள் எண்ணங்களைப் பகிரவும் சமூக ஊடகங்களில் எங்களைப் பின்தொடரவும். கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெறுங்கள்
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, உடல்நலம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு

தமிழ் மற்றும் தெலுங்கில் இப்படத்தை வெங்கடேஷ்வரா சினிமாஸ் மற்றும் சுரேஷ் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் காரைக்குடியில் பூஜையுடன் தொடங்கியது. படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.

Show More

Related Articles

Leave a Reply

Back to top button
%d bloggers like this: