கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் ஓசூர் மாநகரத்தில் பத்தலபள்ளி தமுமுக_மமக கிளை முழுவதுமாக கலைக்கப்பட்டு மமக ஓசூர் ஒன்றிய செயலாளரும் ஊராட்சிமன்ற உறுப்பினருமான முஹம்மது அலி தலைமையில் கிளை தலைவர் செய்யத் உட்பட நிர்வாகிகள் மற்றும் ஏராளமான இளைஞர்கள் மமக உட்பட பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி மனிதநேய ஜனநாயக கட்சியின் ( MJK ) கொள்கை மற்றும் பன்முகத்தன்மை கொண்ட அரசியல் சேவைகளால் ஈர்க்கப்பட்டு சமுதாயத்தின் நட்சத்திர பேச்சாளரும் மாநில செயற்குழு உறுப்பினருமான ஓசூர் நவ்ஷாத் முன்னிலையில் மஜக_வில் இணைந்தனர்..
மேலும் அந்த கிளையில் அதிகமான உறுப்பினர்களை சேர்த்து கொடியேற்று விழா நடத்துவது மற்றும் “மக்களுடன் மஜக 2023” திட்டத்தை முன்னெடுப்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்நிகழ்வில் மஜக மாவட்ட செயலாளர் முஹம்மத் ஆரிப், துணை செயலாளர் சர்தார், ஓசூர் மாநகர செயலாளர் முஹம்மத் உமர், பொருளாளர் அப்துல் வஹாப், அன்சர், பத்தலபள்ளி பாஷா, மஹபூப், ஜலால், ஷெரீப், உட்பட நிர்வாகிகள் உடனிருந்தனர்.