
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் மதிப்பீட்டு மதிப்பெண் விவரங்களை ஏப்ரல் 19ம் தேதிக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என தேர்வுத்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை மார்ச் 2ம் தேதி தமிழக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.அதன்படி பிளஸ் 2 பொதுத்தேர்வு மே 5ம் தேதியும், பிளஸ் 1 பொதுத்தேர்வு மே 9ம் தேதியும் நடக்கிறது. 10வது
வகுப்பு பொதுத்தேர்வு மே 6ம் தேதி துவங்குகிறது.மேலும், 10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு, ஏப்.,25ல் துவங்கும் என, பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே அறிவித்துள்ளது.
அதன்படி, 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு, ஏப்., 25ல் துவங்கி, மே, 2ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும், செய்முறை தேர்வு மதிப்பெண்களை, மே, 4ம் தேதிக்குள், முதன்மை கல்வி அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது. .
இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்
இந்நிலையில், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் மதிப்பீட்டு மதிப்பெண் விவரங்களை ஏப்ரல் 19ம் தேதிக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என தேர்வுத்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அவர் அனுப்பிய சுற்றறிக்கையில், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. செய்முறை தேர்வுகள்
ஏப்ரல் 25ம் தேதி முதல் மே 2ம் தேதி வரை நடைபெறும்.அதற்கு முன்னதாக மாணவர்களின் மதிப்பீட்டு மதிப்பெண்களை பதிவு செய்யும் பணியை முடிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம்
எனவே, மாணவர்களின் வெற்று மதிப்பெண் பட்டியலை, ஏப்., 7ம் தேதி முதல், 9ம் தேதி வரை, தேர்வுத் துறை இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம். பதிவிறக்கம் செய்ய வேண்டும். தலைமையாசிரியர்கள் மாணவர்களின் மதிப்பீட்டு மதிப்பெண்களை பூர்த்தி செய்து அவர்களின் விவரங்களை ஏப்ரல் 12 முதல் 19 வரை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
அதன்பின், தலைமையாசிரியர்கள் மதிப்பெண் பட்டியலை, மே 21ம் தேதிக்குள், அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.அதன் அறிக்கையை, மே, 23ம் தேதிக்குள், முதன்மை கல்வி அலுவலர்கள், அந்தந்த மாவட்ட தேர்வு அலுவலர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.