Uncategorized
Trending

Isha founder Satguru :சத்குருவுக்கு முழு ஆதரவு – உலக முஸ்லிம் லீக்!

சத்குருவின் "மண்ணைக் காப்போம்" இயக்கத்திற்கு முழு ஆதரவையும் அளிப்பதாக உலக முஸ்லிம் லீக் பொதுச் செயலாளர் டாக்டர் அல்-இசா தெரிவித்துள்ளார்.

மண் வளத்தைப் பாதுகாக்கத் தேவையான சட்டங்களை உலக நாடுகள் இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தி, ஈஷா நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ், ‘மண்ணைக் காப்போம்’ இயக்கத்தைத் தொடங்கினார்.

மார்ச் 21ம் தேதி லண்டனில் இருந்து பயணத்தை தொடங்கிய சத்குரு, ஐரோப்பிய கண்டத்தில் உள்ள பல்வேறு நாடுகளுக்கு பயணம் செய்தார். அதைத் தொடர்ந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். உலகம் முழுவதும் 27 நாடுகளுக்குச் சென்று, 30,000 கி.மீ., பயணம் செய்து, தமிழகத்தில் தனது பயணத்தை முடிக்க உள்ளார்.

Sadhguru is India's 'Biker Baba': Here's proof

இந்நிலையில், சத்குருவின் இந்த முயற்சிக்கு உலக தலைவர்களும், பல்வேறு அமைப்புகளும் ஆதரவு அளித்து வருகின்றனர். அந்த வகையில், உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க சர்வதேச அரசு சாரா நிறுவனங்களில் ஒன்றான உலக முஸ்லிம் லீக் தனது ஆதரவை வழங்கியுள்ளது.

முன்னதாக சவுதி அரேபியா சென்ற சத்குருவை உலக முஸ்லிம் லீக் இயக்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் அல்-இசா வரவேற்றார். இந்த செய்தி சமூக வலைதளத்தில் பரவிய நிலையில், சத்குருவின் மண் பாதுகாப்பு இயக்கத்திற்கு முழு ஆதரவு இருப்பதாகவும், சத்குருவை சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாகவும் தெரிவித்தார்.

இதற்குப் பதிலளித்த சத்குரு, சாதி, மதம், இனம், மொழிக்கு அப்பாற்பட்டு இயற்கை மண் வளத்தைப் பாதுகாப்பது அவசியம் என்றார். அவரது கருத்து பலராலும் ஆதரிக்கப்படுகிறது.

Sadhguru on 'Save Soil' Campaign - Star of Mysore

Isha founder Satguru Zaki Vasudev has launched the ‘Save the Soil’ movement, urging the nations of the world to enact the necessary laws to protect soil resources.

Satguru, who started his journey from London on March 21, traveled to various countries on the European continent. It was followed by a tour of the Middle East. He will travel to 27 countries around the world, covering 30,000 km to complete his journey in Tamil Nadu.

In this context, world leaders and various organizations have been giving their support to Satguru’s initiative. In that sense, the World Muslim League, one of the most influential international NGOs in the world, has extended its support

Show More

Related Articles

Leave a Reply

Back to top button
%d bloggers like this: