
முஸ்லிம்கள் மீது நடத்தப்படும் தொடர் தாக்குதலை கண்டித்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்
ராம நவமி பேரணிகளின் போது குஜராத், ஜார்கண்ட், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், பீகார், கோவா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் ராம நவமி ஊர்வலங்களின் போது நடத்தப்பட்ட முஸ்லிம்கள் மீதான தாக்குதல்லை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக தேசம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது அதன் ஒரு பகுதியாக ஏப்ரல் 15, 2022 மதியம் 2:00 மணி அளவில் கிருஷ்ணகிரி மாவட்டம ஓசூர் அண்ணா சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட தலைவர் G.ஏஜாஸ் தலைமை ஏற்று நடத்தினார். பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சையது அமீன் வரவேற்றனர், மேலும் எஸ்டிபிஐ கட்சியின் மேற்கு மாவட்ட துனைதலைவர் சபியுல்லா ஜாமியா மஸ்ஜித் முத்தவல்லி ஏஹசான் கான் மற்றும் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட பொதுசெயலாளர் சபீர் அஹமத் அவர்கள் முன்னிலை வகித்தார்கள்.
மேலும் ஆர்ப்பாட்டத்தில் வேலூர் மண்டல செயலாளர் முஹம்மத் கலீல் போஸ்டல் அதுதான் தமிழ் தேசிய குடியரசு இயக்கம் மாவட்ட உறுப்பினர் தோழர் சந்தோஷ் எஸ்டிபிஐ கட்சி கிழக்கு மாவட்ட தலைவர் அஸ்கர் அலி மேற்கு மாவட்ட தலைவர் ஷாநவாஸ் மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆஷிக் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்கள் இறுதியாக மாவட்ட செயற்குழு உறுப்பினர் முஹம்மத் நயாஸ் நன்றியுரை நிகழ்த்தினார்.
இதில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நிர்வாகிகள் எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
செய்திகளுக்காக : முகமது யூனிஸ்