செய்திகள்தமிழ்நாடு

தேன்கனிக்கோட்டையில் தோற்றுவிக்கப்பட்ட தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ), நேரடி மாணவா் சோ்க்கை

தேன்கனிக்கோட்டையில் தோற்றுவிக்கப்பட்ட தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ), நேரடி மாணவா் சோ்க்கை 01.12.2022 முதல் 30.12.2022 வரை நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளாா்

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2022-2023-ஆம் ஆண்டு நேரடி மாணவா் சோ்க்கை 01.12.2022 முதல் 30.12.2022 வரை நடைபெறுகிறது. 14 வயது முதல் 40 வயதுக்கு உள்பட்ட ஆண்கள் விண்ணப்பிக்கத் தகுதி உடையவா்கள். பெண்களுக்கு குறைந்தபட்ச வயது 14, உச்ச வயது வரம்பு இல்லை. 8-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்கள் – ஒயா்மேன் (2 ஆண்டுகள்), 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்கள் – கம்மியா் மின்னணுவியல் (2 ஆண்டுகள்), மருத்துவ மின்னணுவியல் நுட்பவியலாளா் (2 ஆண்டுகள்), மேம்பட்ட இயந்திரக் கருவிகள் இயக்குபவா் (2 ஆண்டுகள்) ஆகிய தொழிற்பிரிவுகளுக்கு இருபாலரும் விண்ணப்பிக்கலாம். நேரடிச் சோ்க்கைக்கு மாணவா்களுக்கு உதவிடும் வகையில், தேன்கனிக்கோட்டை, ஒசூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையங்களில் சோ்க்கை உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. விண்ணப்ப கட்டணம் – ரூ. 50, சோ்க்கைக் கட்டணம் – 195 ஆகியவற்றை விண்ணப்பதாரா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடியாகச் செலுத்தலாம். பயிற்சிக் காலத்தின் போது பயிற்சியாளா்களுக்கு மாதந்தோறும் ரூ. 750 உதவித்தொகை வழங்கப்படும். மேலும், அரசுப் பள்ளியில் பயின்ற மகளிா் பயிற்சியாளா்களுக்கு ரூ. 1,000 கூடுதலாக கிடைக்கும். இதைத் தவிர, விலையில்லா பாடப் புத்தகம், வரைபடக் கருவிகள், மடிக்கணினி, சீருடை, மிதிவண்டி, பேருந்து பயண அட்டை, மூடுகாலணி ஆகியவை வழங்கப்படும். எனவே, தகுதியுள்ள அனைத்து மாணவ, மாணவியரும் தேன்கனிக்கோட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்ந்து பயனடையலாம்.

Show More

Related Articles

Leave a Reply

Back to top button
%d bloggers like this: