தமிழ்நாடு

நீட் விலக்கு மசோதா விவகாரம்… ஆளுநருக்கு மீண்டும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!!

நீட் தேர்வு விலக்கு மசோதா தொடர்பாக ஆளுநருக்கு தமிழக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வு விலக்கு மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி இதுவரை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாதது அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரும் மசோதா, தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 13ஆம் தேதி நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. இந்த மசோதா உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது என்று குறிப்பிட்ட ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு மசோதாவை அனுப்பாமல் தமிழக அரசிடம் திருப்பி அனுப்பினார். ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு தமிழக அரசு கடும் கண்டனம் தெரிவித்ததோடு, நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்ப சிறப்பு கூட்டத்தை கூட்டியது.

நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும், இந்த விவகாரத்தில் ஆளுநர் காலம் தாழ்த்தக் கூடாது என்றும் தமிழக அரசு வலியுறுத்தியது. இது தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே கடிதம் எழுதியிருந்தார். நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்புவதில் தாமதம் ஏற்படும் எனக்கூறி ஆளுநரின் தேநீர் விருந்தை தமிழக அரசு புறக்கணித்தது.

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு இன்று எழுதியுள்ள கடிதத்தில் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், நீட் தேர்வு விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு 2 முறை ஆளுநர் அனுப்பி வைக்காதது வருத்தம் அளிக்கிறது. தமிழக மக்களின் ஒட்டுமொத்த உணர்வையும், தமிழக சட்டப்பேரவையின் மாண்பையும் கருத்தில் கொண்டு ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெறும் தேநீர் விருந்தில் கலந்து கொள்வது சரியாக இருக்காது என்றும் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

Show More

Related Articles

Leave a Reply

Back to top button
%d bloggers like this: