Beast Movie : ‘பீஸ்ட்’ படத்திற்கு அரசு தடை – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படம் வரும் 13ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், அதற்கான வேலைகளில் படக்குழு மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய 5 மொழிகளில் வெளியாகும் இப்படம் விஜய்யின் முதல் பான் இந்தியா ரிலீஸ் ஆகும். இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு பகுதிகளிலும் இப்படம் வெளியாகவுள்ளது.
இப்படத்தின் ட்ரைலர் சில நாட்களுக்கு முன் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. பீஸ்ட் டிரைலரும் பல்வேறு புதிய சாதனைகளை படைத்து வருகிறது. இந்நிலையில் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது
. அதாவது பீஸ்ட் படத்தை வெளியிட அரசு தடை விதித்துள்ளது. நம்ம ஊர் என்றாலே அதிர்ச்சி அடைய வேண்டாம். தடை இங்கே இல்லை; குவைத்தில். ஆம், குவைத் அரசு தற்போது விஜய்யின் பீஸ்ட் படத்திற்கு தடை விதித்துள்ளது.
வெளியான குரு போன்ற படங்களுக்கு குவைத் அரசு தடை
தீவிரவாதம் மற்றும் வன்முறையை தூண்டும் படங்கள் மீது குவைத் அரசு தொடர்ந்து கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. எனவே அந்த அடிப்படையில் தான் பீஸ்ட் படத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.சமீபத்தில் விஷ்ணு விஷால் நடித்த எப்ஐஆர் மற்றும் மலையாளத்தில் வெளியான குரு போன்ற படங்களுக்கு குவைத் அரசு தடை விதித்தது. இந்தியாவில் உள்ள தணிக்கை வாரியத்தால் பீஸ்ட் யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ளது.
அதன்படி, 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் எந்த தடையுமின்றி படத்தைப் பார்க்கலாம். ஆனால் 12 வயதுக்குட்பட்டவர்கள் தங்கள் பெற்றோரின் வழிகாட்டுதலின் கீழ் மட்டுமே படத்தைப் பார்க்க முடியும்.
வேறு சில அரபு நாடுகள் தடை செய்ய வாய்ப்புள்ள பீஸ்ட் படத்தை குவைத் அரசு தடை செய்துள்ளது. அதே சமயம் அரபு நாடுகளின் பட வசூல் ஒப்பீட்டளவில் குறைவாக இருப்பதால் வணிக ரீதியாக பீஸ்ட் படத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் கூறப்படுகிறது.
சமூக வலைதளங்களில் எங்களைப் பின்தொடரவும், உங்கள் எண்ணங்களைக் கண்டறியவும் பகிர்ந்து கொள்ளவும். கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, உடல்நலம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு