மாநிலம்

எறும்பு கடித்து குழந்தை பலி! பெற்றோர்களே கவனமாக இருங்கள்…

உத்தரபிரதேச மாநிலம் முடாரி கிராமத்தை சேர்ந்தவர் சுரேந்திர ராய்க்வார். அவர் கர்ப்பிணி மனைவி சீமாவுடன் மே 30 அன்று மஹோபா மாவட்டத்தில் உள்ள மகளிர் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. புதிதாகப் பிறந்த குழந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, மருத்துவர்கள் குழந்தையைப் பிறந்த குழந்தைகளின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர்.

வார்டில் அழுக்கு மற்றும் எறும்புகள் இருப்பதாக குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் மருத்துவர்களிடம் புகார் அளித்தனர். ஆனால் மருத்துவமனை நிர்வாகம் புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவமனைக்கு தகவல் கொடுத்ததையடுத்து குடும்பத்தினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பிறந்து மூன்று நாட்களே ஆன குழந்தை எறும்பு கடித்து உயிரிழந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியமே குழந்தை இறப்புக்கு காரணம் என தெரிவித்தனர். மேலும் ஒரு மருத்துவர் ரூ.6,500 லஞ்சம் வாங்கியதாகவும் குற்றம்சாட்டினர். தகவல் கிடைத்ததும் கோட்வாலி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து விசாரணை நடத்த தலைமை மருத்துவக் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.

Ant bite kills baby! Parents, be careful …

Surendra Raikwar hails from Mudari village in Uttar Pradesh. He was rushed to the Women’s District Hospital in Mahoba District on May 30 with his pregnant wife Seema. He had a baby boy. Following the illness of the newborn, the doctors admitted the baby to the neonatal intensive care unit.

Parents and relatives of the child complained to hospital staff and doctors that there was dirt and ants in the ward. But the hospital management did not take any action on the complaint. The family staged a protest yesterday after the hospital was informed that the baby had died.

Relatives say the three-day-old baby was bitten by an ant and died. They said the negligence of the hospital management was the cause of the baby’s death. They also accused a doctor of taking a bribe of Rs 6,500. Upon receiving the information, the Kotwali police arrived at the scene and investigated. The Chief Medical Superintendent has ordered an inquiry into the matter.

Show More

Related Articles

Leave a Reply

Back to top button
%d bloggers like this: