விளையாட்டு

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வங்கதேசம் 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி .

Bangladesh won the first T20

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வங்கதேசம் 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆப்கானிஸ்தான் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதல் மூன்று ஒருநாள் போட்டிகளில் வங்கதேசம் 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

அதை தொடர்ந்து டி20 தொடர் நடக்கிறது. இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி இன்று நடந்தது. டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

ஒருநாள் தொடரில் விளையாடி வங்கதேச அணி தொடரை வெல்ல உதவிய லிட்டன் தாஸ், தொடரை கைப்பற்றியதுடன் முதல் டி20 போட்டியிலும் அபாரமாக விளையாடினார். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 3வது வரிசையில் இறங்கி அபாரமாக விளையாடிய லிட்டன் தாஸ் 44 பந்துகளில் 4 பவுண்டரிகள், 2 சிக்சர்களுடன் 60 ரன்கள் எடுத்தார்.

லிட்டன் தாஸ் பேட்டிங் செய்ய வங்கதேசம் 20 ஓவர்களில் 155 ரன்கள் எடுத்தது. 156 என்ற சவாலான இலக்கை துரத்திய ஆப்கானிஸ்தான் அணி தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.

ஆப்கானிஸ்தான் அணியில் 3 வீரர்கள் மட்டுமே இரட்டை இலக்க ரன் எடுத்தனர். அதிகபட்சமாக நஜிபுல்லா ஜட்ரான் 27 ரன்கள் எடுத்தார். கேப்டன் முகமது நபி 16 ரன்களும், அஸ்மதுல்லா உமர்சாய் 20 ரன்களும் எடுத்தனர். ஆப்கானிஸ்தான் 17.4 ஓவர்களில் 98 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது, மற்ற அனைவரும் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தனர்.

இதையடுத்து வங்கதேச அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டி20 தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது. பங்களாதேஷ் அணிக்காக அபாரமாக பந்துவீசிய நசும் அகமது இந்த போட்டியில் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Show More

Related Articles

Leave a Reply

Back to top button
%d bloggers like this: