தமிழ்நாடு

பள்ளிகள் திறக்கும் தேதி ஒத்திவைப்பு… கல்வித்துறை அறிவிப்பு

பள்ளி திறக்கும் தேதி ஒத்திவைப்பு: 2022-23ம் கல்வியாண்டில் 1 முதல் 12ம் வகுப்பு வரை வகுப்புகள் தொடங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ஆண்டுதோறும் மார்ச் மாதம் தொடங்குவது வழக்கம். இதைத் தொடர்ந்து 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வும், மற்ற வகுப்புகளுக்கு ஆண்டு இறுதி தேர்வும் நடத்தப்படும். ஆனால், நடப்பு கல்வியாண்டில் பள்ளி நேரிடை வகுப்புகள் தாமதமாக தொடங்குவதால், பொதுத்தேர்வு மற்றும் இறுதி தேர்வுகள் இம்மாதம் இறுதி வரை நடைபெறும்.

அதன்படி, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு, மே, 5ல் துவங்கி, 28ம் தேதி முடிவடைகிறது.இதேபோல், 11ம் வகுப்பு மாணவர்களுக்கு, 9ம் தேதி முதல், 31ம் தேதி வரையிலும், 10ம் வகுப்புக்கு, மே, 6ம் தேதி முதல், 30ம் தேதி வரையிலும் நடக்கிறது.

மேலும், 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, மே, 5ம் தேதி முதல், 13ம் தேதி வரை, ஆண்டு இறுதி தேர்வு நடத்த வேண்டும் என, தெரிவிக்கப்பட்டது.1 முதல், 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, மே, 13ம் தேதி கடைசி வேலை நாளாக அறிவிக்கப்பட்டது.

அதன்படி, தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் மெட்ரிக் பள்ளிகளில் 1 முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வு இன்றுடன் முடிவடைந்தது. இதனால் நாளை முதல் 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து கோடை விடுமுறை முடிந்து அடுத்த மாதம் ஜூன் 13ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், 2022-23ஆம் கல்வியாண்டுக்கான 1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகள் தொடங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. ஜூன் 13ம் தேதி பள்ளிகள் தொடங்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

Show More

Related Articles

Leave a Reply

Back to top button
%d bloggers like this: