ஓசூர் மாநகர அரசு உருது மேல்நிலைப்பள்ளியில் நமது இந்திய திருநாட்டின் 74_வது குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
தலைமையாசிரியை இரா.தேவசேனா அவர்கள் தேசிய கொடியேற்றி வைத்து சிறப்புரை நிகழ்த்தினார்.
கலை , பேச்சுதிறன், உட்பட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பரிசுகள் மற்றும் ஊக்கதொகை மைஜா டிரஸ்ட் சார்பாக வழங்கப்பட்டு கௌரவபடுத்தப்பட்டது.
தற்போது வேலூர் மாநகரில் சார் ஆட்சியராக (sub collector) பணிபுரியும் நமது ஓசூர் மாநகரத்தை சேர்ந்த முனீர் அஹ்மத் சார்பாக மாணவர்களுக்கு கை கடிகாரம் மற்றும் சஹாரா டிரஸ்ட் சார்பாக பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது
இந்நிகழ்சியில் ஜமாத்தார்கள், PTA, SMC, MASCOT, MYJA, SAHARA, MJK, உட்பட பல்வேறு தன்னார்வ அமைப்புகளின் நிர்வாகிகள் ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.