
திருவள்ளூர்:
அரசியலுக்கு வந்தால் கோபம் வரக்கூடாது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தின் போது கூறியுள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சியில் பிரசாரம் செய்தஅவர் இவ்வாறு கூறினார்.
மேலும், முதல்வர் ஸ்டாலினை போல் உடனே தலைவராக வரவில்லை என்றும், படிப்படியாக முன்னேறி இன்று இந்த நிலையை எட்டியிருப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
நாடாளுமன்ற தேர்தலை விட உள்ளாட்சி தேர்தல் முக்கியமானது என்றும், ஓவ் ஒரு மணி நேரத்தையும். வீணடிக்காமல் ஒவ்வொரு நிமிடமும் வாக்காளர்களை அதிமுகவினர் சந்திக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
வெற்றி பெறலாம் என்பதால் யாரும் அலட்சியமாக இருக்க வேண்டாம் என்றும், அ.தி.மு.க.,வுக்கு வாக்களிக்கக்கூடியவர்களை, எங்கு வேண்டுமானாலும் அழைத்து வந்து, ஓட்டு போடுவது, வேட்பாளர்களின் பொறுப்பாகும் என்றார்.
அரசியலுக்கு வருபவர்கள் கோபப்பட வேண்டாம் என்றும், சிரித்த முகத்துடன் மக்களின் மனதை வென்றால் மட்டுமே கோபப்பட வேண்டும் என்றும். அறிவுரை வழங்கினார். கீழ்மட்ட நிர்வாகிகள் படும் கஷ்டங்களை, கிளைச் செயலாளரிடம் தொடங்கி, இன்று இந்த அளவுக்கு உயர்ந்து வருவதை அறிந்தவர் என்றும், ஸ்டாலினைப் போல எளிதில் தலைவராகிவிடவில்லை என்றும் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
தமிழகத்தில் திமுக ஆட்சியில் இருப்பதாகவும், அதனை தூக்கி எறிய மக்கள் தயாராக இருப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி கூறினார். திமுக அரசின் மீது அரசு ஊழியர்கள் மிகுந்த நம்பிக்கை வைத்து இன்று ஏமாற்றம் அடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து, மக்கள் நிம்மதியாக வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறி, வரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுக்கு அரசு ஊழியர்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.